Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 AUG 1938
இறப்பு 20 MAR 2019
அமரர் சின்னத்துரை ராஜரத்தினம்
Retired Medical Laboratory Technician
வயது 80
அமரர் சின்னத்துரை ராஜரத்தினம் 1938 - 2019 குரும்பசிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, கொழும்பு, ஓமான், கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை ராஜரத்தினம் அவர்கள் 20-03-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, தங்கமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற முத்துகுமார், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவசக்தி(பபா) அவர்களின் அன்புக் கணவரும்,

அகல்யா(கனடா), வத்சல்யா(பிரித்தானியா), சதீசன்(Engineer- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற நாகராசா, வீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோபால்(கனடா), சிறீகாந்தன்(பிரித்தானியா), இந்துமதி(பிரித்தானியா), ஆகியோரின் அருமை மாமனாரும்,

தயாளகுமார்(சுவிஸ்) அவர்களின் அன்பு மைத்துனரும்,

Dr. சகிஷ்னன்(MD), நிதுஷா(கனடா), Dr. சிந்தியா(M.B.B.S), ஹரிசன்(கோபி- பிரித்தானியா), அபிதா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்