
அநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். கோப்பாய் வடக்கு, உரும்பிராய் தெற்கு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் நவராஜா அவர்கள் 19-11-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தபேந்திரன், இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உஷாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
தனுசன், தமயந்தி(லண்டன்), தாட்சாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவப்பிரியா, கிசோக்குமார்(லண்டன்), பத்மராஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகவடிவேல், திருச்செல்வம், ஜெயமணி, கமலாதேவி(கனடா) மற்றும் வசந்தகுமாரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆனந்தன், நாகரட்ணம்(ஜேர்மனி), நிமலகாந்தன்(கனடா), வாசுகி சிறிக்குமார்(ஜேர்மனி), யோகாந்தி சற்குணநாதன்(ஜேர்மனி), தவராஜா சிவசக்தி(பிரான்ஸ்), சாமினி ஜெயக்குமார்(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டனிசா, டிவ்யனா, பகிசனா, மதுமிளா, கர்மிசா, துசிந்தன், வலக்சன், தருக்சன், நிவோசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.