6ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராசரத்தினம் கந்தசாமி
(சாமி)
வயது 56
Tribute
3
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசரத்தினம் கந்தசாமி அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறாண்டுகள் சென்றிருந்தால் என்ன ஐய்யா
உங்களின் பார்வையும் தோற்றமும் செயல்களும்
கண்முன்னே கற்றாடுதய்யா!
எம்மவர் விழிகளில் நீர் ஓடிக் கொண்டே
நினைவலைகளால் எம் உள்ளம் வாடுதே ஐயா!
பாசத்தின் கருவியாய் பண்பின் சிகரமாய்
அன்பின் திருவுருவாய் எதை நீர் செய்தாலும்
கண் போல எமை எல்லாம் காத்து
யாவருக்கும் ஆசை மொழி கூறி
அரவணைத்து பேணிக் காத்த எம் தெய்வமே!
அலை அலையாய் வரும் கடல் கூட
வெய்யிலில் வற்றி விடும். என் கண்ணில்
கண்ணீர் வற்றவில்லையே...
நித்தமும் உங்கள் நினைவு என்னை பித்தம்
கலக்க வைக்கிறது...
ஆறு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் மனதில்
என்றென்றும் நிறைந்திருக்கும்!
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
7ஆம் ஆண்டு நினைவு நாளை நினைவுகூர்ந்து அவரை அனைவரும் நினைவுகூறுகிறோம்.