யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயரட்ணம் இராஜரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நினைவலை!
காலம் எல்லாம் என்னை
வாழவைத்த கணவாளனே
காலன் அவன் பார்வையில் சென்றதேனோ
என்னை விட்டு?
வரமென என் வாழ்வில் வந்த தவமே
காலன் உங்களைக் காவுகொண்டு ஆண்டு
ஒன்று ஆனதுவோ நம்ப முடியவில்லை
உங்கள் நினைவால் நாம்
நாளும் தவிக்கின்றோம் - உயிரே!
முதலாவது ஆண்டு நினைவு நாள் வந்ததோ எங்கள் தந்தையே ...!
ஒவ்வொரு நிமிடமும் உங்கள் நினைவுதான் தந்தையே...!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா என
அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா...!
ஒரு ஆண்டு ஓடி மறைந்தாலும் - உங்கள்
நினைவுகள் என்றென்றும் மறைந்திடுமோ
காலங்கள் விடைபெறலாம் ஆனாலும்
கண்முன்னே நிழலாகும் உங்கள் நினைவுகள்
நித்தமும் எம்முடன் உயிர்வாழும் அப்பா...!
ஆண்டு ஒன்றென்ன ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உங்கள்
நினைவலைகள் எங்களுடன் வாழும் அப்பா!
உங்கள் வார்த்தைகள் எங்களை வழிநடத்த நீங்கள் இருக்கின்றீர்கள்
என்ற நினைவோடு நீதி நெறி தவறாமல்
எங்களின் காவல் தெய்வமாக நீங்கள் வழிநடத்த உறுதியாக
வாழ்ந்துகொண்டே இருப்போம் அப்பா...
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரன்