மன்னார் பெரிய நாவற்குளத்தைப் பிறப்பிடமாகவும், தோணிக்கல் ஆலடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரட்ணம் ஞானமணி அவர்கள் 11-05-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தொம்பை விக்ரோறியா தம்பதிகளின் அன்பு மகளும், சக்தியேகு சவரி செயம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசரத்தினம்(முன்னாள் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெசித்தா பிரியதர்சினி(ஆசிரியை- வவுனியா தமிழ் மத்திய.ம.வி ஆரம்ப பிரிவு), அனுலா(ஜேர்மனி), மஞ்சு(சுவிஸ்), வாமதேவன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மரியநாயகம் கொடுத்தோர்(உப அதிபர், வ/நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம்), ரெஜி(ஜேர்மனி), சார்ள்ஸ்(சுவிஸ்), மேரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செபமாலை, அன்னக்கிளி, யோகம்மா, சந்தாம்பிள்ளை மற்றும் அழகம்மா(கனடா), ராணி, நேசம்மா, லூத்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜொனாத்தன்(HSBC வங்கி உதவி முகாமையாளர்), டிவ்வியசாரா(மகாவலி தேசிய கல்வியற் கல்லூரி மாணவி), டிலாணி, பஸ்லிக்கா, டனிஸ், தக்சன், அனா, ஜக்ஸ்டன், ஈத்தன், விவியானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று தோணிக்கல் ஆலடி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, மு.ப 10:00 மணியளவில் இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.