யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கச்சேரியடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜராஜேஸ்வரி பாலச்சந்திரன் அவர்கள் 18-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை(ஆசிரியர்), வள்ளியம்மை(தாதி) தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற சொக்கலிங்கம்(வைத்தியசாலை கண்காணி), கண்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற பாலச்சந்திரன்(கிராம சேவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரசன்னா, பிரசாத், பிரதாப், பிரதீப், சோபிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாமினி, தர்சினி, பிரியதர்சன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,
புவனஇராஜேஸ்வரி, நகுலராஜேஸ்வரி, கேதீஸ்வரராசா, குருபரராசா, பாலராஜேஸ்வரி, மங்களராஜேஸ்வரி, சக்தீஸ்வரராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மங்களேஸ்வரி, குலேந்திரன், புவனேந்திரன், பஞ்சகெளரி, சாந்தினி, ரூசிந்திரன் மற்றும் காலஞ்சென்ற உமாசரண், விஜயகுமாரன், ரதிகலா, துஸ்யந்தினி, நித்தியராஜா, கருணாநந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சந்திரலிங்கராசா, நகுலேஸ்வரி, கலாவதி, புவனேந்திரராசா, ரஜனி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சயந், அஜந், பிரியந், சாய்விணா, விதுலன், தனுசன், கபிலன், கோபிகா, ஜாணுகா, ஜனார்த்தனன், பிரணவி, அம்பிகா, சாருசன், சாருகா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
ஆதவன், ஆரணி, ஆர்த்திகா, ஆருஜா, ஆருன்யா மகிழ்ருதன், சாணவி, பிரவீணா, கரிஷன், விக்னேஸ்வரன், ஜெயபவானி, ஜெயப்பிரதா, பிறேம்நாத், ரிஷிபா, கஜிபா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
நிலா, அபி, கவினா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இல.31, காட்டுக்கந்தோர் ஒழுங்கை, கச்சேரியடி யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் 19-03-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பூதவுடல் துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அனுதாபமும் ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றிகள்.