ஓம் நமச்சிவாய அப்பாவின் கடைசி தங்கையாய் எங்கள் அன்பு ராசு மாமியாய் இருந்த மாமியின் பிரிவு எங்களை வாட்டுகின்றது. எனது முதலாவது பள்ளி நாளில் அழும் என்னை ஒரு சிறு புன்னகையால் சிரித்து கொண்டே கையை பிடித்து கவனமாக கூட்டிச் சென்ற ஞாபகம் இன்னும் என் கண்ணில் தெரிகின்றது. நல்லூர் திருவிழா என்றால் யாழ்ப்பாணம் போகும் எமது குடும்பங்களுக்கு லிங்கம் கூல் பார் சுபாஷ் ஐஸ்க்ரீம் என்று பத்து நாள் திருவிழாவும் எங்களுக்கு கொண்டாட்டம் தான். மாமாவும் மாமியும் முண்டியடித்து போட்டி போட்டு எங்களுக்கு வாங்கித்தரும் பொருள்கள் ஏராளம். அதைவிட செலவிட காசு தந்து பொடியங்கள் போய் என்ஜாய் பண்ணுங்க டா என்று திருவிழாவை பெருவிழாவாக காட்டிய மாமி இன்று கடைசிவரை காலனுடன் போட்டியிட்டு இன்று தெய்வமாகி போனீர்களே! நாக்கைக் கடித்துக்கொண்டு திரும்பி சிரிக்கும் ஒரு கள்ளச் சிரிப்பை இனி நாங்கள் எங்கே காண்போம். எந்தக் கட்டத்திலும் எதற்கும் பயப்படாத ஒரு தைரியசாலி. கடைசி காலத்திலும் ஒரு கை பார்க்கலாம் என்று இறுமாப்பாய் நின்று போராடிய மாபெரும் மங்கை நீங்கள். நீங்கள் இல்லை என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. ராசு மாமி என்று கூப்பிட்டால், ஓம் என்று சொல்லும் குரல் அடங்கிப்போனது ஏன்? உங்கள் ஐந்து செல்வங்களையும் விட்டுட்டு போக எப்படி உங்களால் முடிந்தது. மனம் வேதனையால் வாடுகின்றது. சிவலிங்கம் என்ற மாமாவுடன் சிவனடி சென்று விட்டீர்கள் என்ற ஒரு ஆறுதல் தான் இப்போது எங்களை ஆசுவாசப்படுத்தி இருக்கின்றது. திருக்கேதீஸ்வர சிவனே போற்றி கயிலை நாதனே போற்றி சங்கரா போற்றி. ஓம் நமச்சிவாய. மாமியின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். அத்துடன் உங்கள் பிரிவால் வாடும் உதயகுமார் கௌரி குடும்பம மற்றும் கந்தசாமி குடும்பம் லண்டன்.
Rasu Mami With the most beautiful face,she would pamper and shroud with used to be a teacher before marriage and after work she come home to carry us and play with us every made us a lot of...