யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Hereford ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ராஜமுரளி பாலச்சந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 03-03-2024
ஓராண்டு ஓடியதே அப்பா,
நீங்களின்றி!
ஒரு தோழனாய், ஆசிரியனாய்,
வழிகாட்டியாய்
எம் எல்லாமுமாக இருந்தீர்கள்!
உங்கள் நினைவுகளில் நிஜம் தேடும்,
விட்டில்களாய் நாம்!
வாழ்வெனும் நெடும்பயணத்தில்
உங்கள் கரம்பிடித்தேன்,
நீங்களின்றி ஒரு தனிப் பயணியானேன்,
சாய உங்கள் தோளில்லை
சிரிக்கும் உங்கள் பேச்சில்லை
ஆலோசிக்க நீங்களில்லை,
என்னுள் வாசம் செய்யும்
உங்கள்
ஞாபகங்களும்,
ஒளிப்பதிவுகளுமே ஆதாரம் இன்று!
என் கடைக்குட்டி,
நீ இல்லாத காலம் எனை உறுத்துகிறது!
உன் குரல் கேளாமல்,
முகம் பாராமல்
ஏங்குகிறேன!
நீ இல்லா இவ்வுலகு வெறுமையாய்த் தெரிகிறது!
உன் நினைவுகளால் எனை
ஆற்றப் பழகிக் கொள்கிறேன்!
எம் செல்லத் தம்பி நீ!
குடும்பத்தின் மகிழ்ச்சி நீ!
எல்லோருக்கும் பிடித்தவன் நீ!
இன்று நீயின்றி,
உன் சிரிப்பொலியின்றி
எம் மனம் சோபிக்கவில்லை!
எம் அன்புத் தம்பியை
எப்பிறப்பில் காண்போம் நாம்!
ஆசை மைத்துனனே,
சகோதரனாய் பழகினாய்
உன் நக்கலும் நையாண்டியும்
எமை அன்பால் பிணைத்ததுவே,
உன் பிரிவின் வெற்றிடம்
நிரப்ப முடியாதது!
பாபு !
விண்ணுலகெய்தி இன்று
ஆண்டொன்று கடந்தாலும்
உங்கள் நினைவுகள் அழியாது,
வானில் ஒளிவீசும்
நட்சத்திரங்களில் ஒன்றாகவே
உங்களை நாம் காண்கிறோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்,
பிள்ளைகள், மனைவி, அம்மா, சகோதர
சகோதரிகள்,
மைத்துனர்கள், மைத்துனிமார் மற்றும்
குடும்பத்தார்.