யாழ். ஆதிகாளி கோவிலடி தாவடித்தெற்கு கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஆறுகால் மடம், கனடா Vaughan மற்றும் தாவடித்தெற்கு கொக்குவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜமோகன் சிதம்பரப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நாட்கள் பல சென்றாலும்
கனவெல்லாம் கண்ணீர் சொரிய
கண்கள் நீரில் மூழ்க
கண்டது
எல்லாம் உம் நினைவாக
துடிக்கும்
உம் உறவுகளின் புலம்பல் இது!
எமக்கு எல்லாம் ஆதரவு தந்த எம் தந்தையே!
ஒரு மாதம் சென்றாலும்
எம் நினைவே உருவாகி உள்ளீர்!
இனி எப்போது எமக்களிப்பீர் உம் தரிசனம்!
எமை எல்லாம் தாங்கிப் பிடித்த
வழிகாட்டியே
நீர்
இப்பிறவி அல்ல எப்பிறவியிலும்
எமக்கு தந்தையாக வேண்டும்!
என இறைவனை மன்றாடுகின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 11-02-2026 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 13-02-2026 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் திவ்யமஹால் மண்டபத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அவரது ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
காளி கோவிலடி,
தாவடி, தெற்கு, கொக்குவில்.