5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Neuss ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜாமணி விக்கினேஸ்வரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறு பத்து ஆண்டுகள்
உன் வாழ்வு இவ்வுலகில்
நூறு ஆண்டுகள் வாழ்ந்திடுவாய்
உனை வாழ்த்தியதோ நாவுலகில்
புடம் போட்ட தங்கமாய்
இதயங்களில் பொலிவு பெற்றாய் பூவுலகில்
அடம் பிடித்து அழைத்தாரே
உடலிழந்து உறவிழந்து அவ்வுலகில்
ஐந்து ஆண்டுகள் எம் பிடியில் உன் விடுதலை
ஐம்பது ஆனாலும் உன் வடிவில் எம் நினைவுகள்
மந்திரியாய் வழி நடத்தும் எம் வழியில்
மந்திரமாய் தொடர்ந்திடுவோம் உன் வழியில்
மறு பிறப்பு என்றிருந்தால் எம் வழியில்
வரும் பிறப்புகளில் நீ உருவெடுப்பாய் தாயே
புண்ணியம் பெற்ற ஆத்ம சாந்திக்காக
என்றும் எமது அமைதிப் பிரார்த்தனைகள் தொடரும்...
சேர்ந்தவனும் சார்ந்தோரும்
தகவல்:
குடும்பத்தினர்