யாழ். தெல்லிப்பழை புதுத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலிங்கம் தவமணி அவர்கள் 09-11-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிட்ணர் சரவணமுத்து சிதம்பரம் தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை கந்தையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா இராஜலிங்கம்(புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
மனோகாந்தன், சுபோதினி, சுடர்வதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இளங்குமரன், குணசீலன், சுஜாத்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற செல்வராசா, சிவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராசா திருமணி, சிவராஜா நிர்மளா ஆகியோரின் அருமை மைத்துனியும்,
சிந்தூரி, தக்ஷினி, கவிலாஷ், ஆரணிக்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
தவமணி அக்காவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப்பிரார்த்திக்கின்றோம் பொன்னையா தவராசா குடும்பம் புதுத்தோட்டம் தெல்லிப்பளை.