யாழ். நல்லூர் ஆடியபாதவீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலிங்கம் பத்மாவதி அவர்கள் 08-04-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராஜலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரஜனி, ரஞ்சன், மோகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சறோஜினிதேவி, புஸ்பராணி, மகேஸ்வரன், விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜானகி, ஜெகன், ஆனந்த், பிரதீசன், பிரதீப், துஷி, சஜி, ஆதவன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
பார்வதி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest In Peace.