

-
03 SEP 1934 - 24 NOV 2019 (85 age)
-
பிறந்த இடம் : Trichy, British Indian Ocean Terr.
-
வாழ்ந்த இடம் : Pandaraveli, Sri Lanka
திருச்சி மாவட்டம், கன்னியாகுடி கிராமத்தைப் பிறப்பிடமாகவும், பண்டாரவளை பெரிய வெவத்தன தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொணட ராஜலக்ஷ்மி மோகன்ராஜ் அவர்கள் 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மோகன்ராஜ் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அலவத்துகொட சிதம்பரம்பிள்ளை, காமாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பண்டாரவளை ஏகாம்பரம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கனகராஜ், கல்யாணி, மனோகர், தேவகி, சியாமளா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தி, நடராஜ், முரளிதரன், சண்முகம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், ராஜூபிள்ளை, நடேசன், அருணாசலம், ராஜலிங்கம் மற்றும் வைத்திலிங்கம்(சென்னை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானை, அருணாசலம், சண்முகநாதன், இராமாயி, லக்ஷ்மி, ராசாத்தி மற்றும் ராஜாம்பாள், கணேசன்(திருச்சி) ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,
காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பெரியண்ணன்(வெவத்தன), திரு.திருமதி ராஜலிங்கம்(அலவத்துகொட), திரு.திருமதி பெரியண்ணன்(வெவத்தன), திரு.திருமதி ராஜலிங்கம்(அலவத்துகொட), திரு.திருமதி ராமலிங்கம் பிள்ளை(கண்டி), திரு.பெரியசாமி பிள்ளை(மஸ்கெலியா M.K.S.T.) மற்றும் திருமதி அமிர்தம் ஆகியோரின் அன்பு சம்பந்தியும்,
காயத்திரி, தர்ஷினி, அபிஷன்யா, சிவாந்தினி, ஹம்ஷிகா, அனுக் அவிணாஷ் அகியோரின் பாசமிகு அம்மாயியும்,
உதேஷன், அஷ்வின் ஆகியோரின் அப்பாயியும்,
டினாரா, சாஷி, தன்விகா, ஹர்ஷிவ் ஆகியோரின் கொள்ளுப்பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக 26-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11:00 மணி முதல் வைக்கப்பட்டு இறுதிக்கிரியை 27-11-2019 புதன்கிழமை அன்று பகல் 01:00 மணியளவில் நடைபெற்று பி.ப 03:00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.