யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயலெட்சுமி இராஜகோபாலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கருவறை தந்த நாள்முதல்
கண்ணாய் எம்மைக் காத்த அம்மாவே
தந்தையை இழந்து நாம்
தவித்த போது தந்தையும் ஆனவள் நீயம்மா
துடுப்பிழந்த படகு போல்
துன்பக் கடலில் எம்மைத் தத்தளிக்க விட்டு விட்டு
தனியாகத் தொலைதூரம் போனாய் நீயம்மா
உறவு ஒன்றல்ல நூறு இருப்பினும்
உந்தன் மடிமீது தலை சாய்த்து
துயரம் தனைக் களைந்திடும் சுகம்
தனை இழந்தோம் நாங்களம்மா
ஆண்டு ஒன்று என்ன
ஆயிரம் தான் ஆனாலும்
எங்கள் நெஞ்சில் அழியாத கோலமாய்
என்றுமே நிலைத்திருக்கும் உந்தன் உருவமம்மா
என்றும் உங்கள் நினைவுகளை
நெஞ்சில் சுமந்தபடி உயிர்வாழும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
அண்ணா, அண்ணி, அக்கா, தம்பிமார்கள், தங்கை,
மைத்துனர்கள், மைத்துனிமார்கள், பெறாமக்கள்