Clicky

பிறப்பு 03 NOV 1925
இறப்பு 09 FEB 2020
அமரர் ராஜா விசுவநாதன்
யாழ் இந்துக் கல்லூரி மாணவர்- யாழ்ப்பாணம், சிறீலங்கா சட்டக் கல்லூரி மாணவர்- கொழும்பு, சட்டத்தரணி, யாழ் நகர முன்னாள் முதல்வர்(1979- 1983), யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர்
வயது 94
அமரர் ராஜா விசுவநாதன் 1925 - 2020 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rajah Visuvanathan
1925 - 2020

எமது இனத்தின் அறிவு, ஞானம், அதிகாரம், ஆளுமை,அன்பு, நேசம், நேர்மை என்று பல படிமங்களின் தொன்ம அடையாளங்களாக வரலாற்றில் பல ஏடுகள் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் நிச்சயம் ஐயாவின் வரலாறும் ஒரு பொன்னேடாக திகழும் என்பதில் ஐயமில்லை. தங்களின் திருக்கரங்களால் தங்கப்பதக்கம் வாங்கியதை என் இறுதி மூச்சுவரை பெருமையாக கொண்டிருப்பேன். உங்கள் மறைவுச் செய்தி நிச்சயமாக எமது பேரிழப்புகளில் ஒன்று. உங்கள் ஆத்மா சாந்தியடையவும் , உங்கள் மறைவால் தவிக்கும் குடும்பத்தினருக்கு உங்கள் இழப்பை தாங்கும் மனோசக்தியையும் கொடுக்க வேண்டுமென்று இறைவனைப் பிராத்திக்கின்றோம். உருத்திரா அண்ணா! உங்களினதும், உங்கள் குடும்பத்தினர் அனைவரினதும் துயரத்தில் நாமும் பங்கேற்கிறோம். ஐயாவின் இழப்பை யாராலும் ஈடு செய்யவியலாது. இறையருளும், காலமும் உங்கள் துயரை ஆற்ற பிராத்திக்கின்றோம்.

Write Tribute