

யாழ்.திருநெல்வேலி தாழையடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், Zweite Str 01, 58809 Neuenrade ஜேர்மனியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜகோபால் சிவப்பிரகாசம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் அடையாளச் சின்னம்
அரவணைப்பின் அழகு நிறை உதாரணம்
அணுவளவும் கலப்படிமில்லா ஆழ்ந்த அன்பு....... !!
வெற்றிகளை மட்டுமே எமதாக்கிய விவேகம்.!
வாழ்க்கை முழுவதுமே எமக்கான அர்பணிப்பு...!
அன்பு தொடங்கி அர்பணிப்பு வரை 'அப்பா'
என்பதில் அடங்கி விட்டது.....!!!
காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே நினைவலைகள் தொடரட்டும்
அல்லும் பகலும் ஓயாது உழைத்ததனால்
அமைதியில் ஓய்வெடுக்க இறைவனடி சென்றீரோ அப்பா
எம்முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் அப்பா
காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் சென்றாலும்
கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்
கடந்து வந்த பாதையில் நினைவுகளோடு வாழ்ந்து வரும் மனைவி
என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும் மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்.!!