
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rheinfelden ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜதுரை திருப்பதிவாசன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
கூண்டுக்குருவி ஒன்றை காலன் எனும் வேடன்
கண் எட்டா தூரம் கொண்டு சென்றானோ
கூடித்திரிந்த நண்பர்கள் நாமிருக்க
நீ மட்டும் எங்கு சென்றாய்...
எங்கும் எப்போதும் ஒன்றாய், ஒற்றுமையாய்
பண்பலடித்து, பலதையும் பகிர்ந்தாயே
துன்பம் என்றபோது மட்டும் அருகில்
தோள் சாய தோழர்கள் நம் தோளிருக்க
தூநெர் சேயத் தேடி தொலைதூரம் சென்றதேனோ
விலகி செல்கிறாய் என்று விட்ட தன்
விளையும் வேதனையும் தான் எமக்கிதுவோ
நண்பர்கள் நாம் நாட்களை எண்ணிட
காகிதம் எடுத்து கண்ணீர் அஞ்சலி அடிக்க
வைத்ததேனோ???
விடை இல்லா வினாக்களோடும்,
வலியுடனும் வேதனையுடனும்
விழியோரம் வழிந்தோடும்
கண்ணீருடனும் நாம் இங்கே
நெஞ்சிருக்கும் வரை நண்பர்கள் நம் வாழ்நாள்
நெடுகிலும் நண்பா பிரியன்
என்றும் உன் நினைவிருக்கும்.
உன் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி !