யாழ். பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட ரகுபதி ஹரேஸ் அவர்கள் 05-04-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ரகுபதி(ஓய்வுபெற்ற யாழ் பிரதம தபால் திணைக்கள அலுவலர், உரிமையாளர்) ரதிதேவி (ரதி ஸ்டோர்ஸ் பெருமாள் கோவிலடி) தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானேஸ்வரி(ஆசிரியை- கொழும்பு) அவர்களின் அன்புக் கணவரும்,
விதூசினி(லண்டன்), ரணேஸ்(கோபி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேஸ்(லண்டன்), லோஜினி, சு.சுசிலன், ஜெ.புவிராணி, த.மேதாநிதி, செந்தமிழ் ஞானச்செல்வி, சு.தமிழ்ருட்செல்வன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஸ்வின்(லண்டன்), அஸ்மிர்தா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
வியாஸ் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இல. 162, கன்னாதிட்டி வீதி யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கோம்பையன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.