Clicky

30ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராகுலா தவராஜா அமரர் அனுலா முகுந்தன்
இறப்பு - 15 AUG 1994
அமரர் இராகுலா தவராஜா அமரர் அனுலா முகுந்தன் 1994 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

இராகுலா தவராஜா
பிறப்பு :  28-11-1969
இறப்பு: 15-08-1994

அனுலா முகுந்தன்
பிறப்பு : 11-07-1971
இறப்பு: 15-08-1994

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். மீசாலை, ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராகுலா தவராஜா & அனுலா முகுந்தன் ஆகொயோரின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பால் எமை ஆண்ட பிள்ளைகளே

 அன்றொரு நாள்
ஒரு வார்த்தை சொல்லாமல்
 எமை விட்டுப் பிரிந்து போய்
 இன்றோடு முப்பது ஆண்டு ஆனதா.?
 இன்னும் ஆறவில்லை
 எம் துயரம் அக்காக்களே…
ஆண்டுகள் பல சென்றாலும்
 வலிகள் நகரவில்லை
 வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும்
 உங்களை நாங்கள் மறக்கவில்லை!
 இருந்தபோதே எம்மைக்காத்த
காவல் தெய்வங்களே
இறந்தாலும் எம்மை இறையாக்காப்பீரே!
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்
எங்கள் ஆழ்மனங்களின் ஆணிவேர்
 நீங்கள் எங்களுக்கான
இலக்கணம் படைத்த
 உங்களை முப்பது அல்ல
பல நூறு ஆண்டுகள் சென்றாலும் மறக்கமாட்டோம்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 என்றும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: எப்போதும் உங்கள் நினைவில் வாடி நிற்கும் அப்பா, அம்மா, சகோதரிகள்