அத்துர புலத்சிங்களவைப் பிறப்பிடமாகவும், வவுனியா கோயில் புதுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட ராக்கன் மோகனதாஸ் அவர்கள் 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராக்கன் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகாம்புஜம்(பபா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அருண்பிரசாத்(பிரித்தானியா), அரவிந்த்பிரசன்னா(பிரித்தானியா), அச்சலா பிரபாசினி(அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மாவட்டத் தொழிற் திணைகளம் - வவுனியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிரஞ்சலி, நிம்மியா, வசிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நேத்ரா, வேதவியாஸ், கனிஸ்க் யாதவ், அக்ஷராயதுசி ஆகியோரின் அன்புப் பேரனும்,
Dr.கோவிந்தராஜ், சந்ரராஜ், கமலாதேவி, நந்தாதேவி ஆகியோரின் பாசமிகு அண்ணாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2026 புதன்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வெளிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94773429890