10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் புவனேஸ்வரிஅம்பாள் தம்பிஐயா
1946 -
2013
கரணவாய், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்.கரணவாய் வடக்கு நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரிஅம்பாள் தம்பிஐயா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குலவிளக்காய்
ஒளியேற்றிய அம்மாவே!
எங்கள் இதயங்களில்
கோயிலாய் வாழ்கின்ற தாயே!
எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
பத்து ஆண்டுகள் ஆனதம்மா!
எப்பொழுதும் மழைத்தூறலாய்
உங்கள் நினைவு....!
எங்கள் இதயங்கள்
நனைந்த காடாய் கிடக்கின்றன!
உன்னைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை
உன் அன்பிற்கு இணை யாருமில்லை
உன் பாசத்திற்கு ஏங்கும் எங்கள் ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய் எங்களை கொல்கிறது..
அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்