யாழ். கோப்பாய் தெற்கு பழைய தபாற்கந்தோர் ஒழுங்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி தயாபரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எமது குடும்பத்தின் குல விழக்காய் வந்து
ஒழிவிழக்காய் திகழ்ந்த எங்கள் அண்ணியே
அன்பு என்னும் கயிறு கொண்டு அரவணைத்த தாய் அவள்
போல் உந்தன் இழப்பிணை எந்த நெஞ்சம் தாங்கவல்லது
எம்முடன் அன்பாக உறவாடும் அண்ணியே ஒழி
நிறைந்த கண்கலும், சிரித்த உங்கள் முகமும்
துடிப்பற்றுப்போன செய்தியை கேட்டோம்
நெஞ்சம் பிழந்து சோகம் ததும்பிட
கதறினோம் கத்தினோம்.
துயரோடு எம்மை விட்டு தூரமாய் சென்றீர்
அண்ணி முப்பத்தொரு நாள் ஆனாலும் துவண்டு
நிற்கின்றோம் உம் விழிதேடி எம் உயிருடன்
ஒன்றாய் கலந்து விட்ட எங்கள் தெய்வமே
நிணைவோடு என்றும் நீங்காது வாழ்வோம் நாம்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
கணவர், மைத்துணர், மைத்துணி
அன்னாரின் மரணச்செய்திக்கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 27-02-2020 வியாழக்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெறும்.