யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் 10ம் கட்டை உயிலங்குளம், லண்டன் Watford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி சிவசுப்பிரமணியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நிமிடங்களாய் நாட்களாய் மாதங்களாய்- இன்று
இரண்டு ஆண்டுகளாய் வளர்ந்து நிற்பது
உங்கள் பிரிவின்சோகம் அம்மா
அன்பென்னும் பாதையில் நாம்
அனைவரும் பயணிக்கவும்
எல்லா வளங்களையும் பெற்று
ஏற்றமுடன் வாழவும்
ஏணியாய் தாங்கிய எங்களின்
அன்புக்குரிய தாயே நாம்
கண்ணீரால் எழுதும் கவிமடல்
ஈர விழியோடு இராண்டு சென்றாலும்
மாறாது எம்துயர்
அம்மா என்று அழைக்கும்போது
அன்பாக அருகில் வந்து
அதரவாக எம்மை அணைத்திடும் சுகத்தினை
எங்களால் மறக்கமுடியவில்லை...
வேரென இருந்து எம்மை காத்தீர்கள்
அம்மா விழுதுகளாய் நாமிருந்தோம்
கண்ணிறைந்த கண்ணீராய்
நாம் காலமெல்லாம் அழுவதற்கோ
காற்றாக நீங்கள் பறந்தீர்கள்
ஆனாலும் அம்மா
கண்முன்னே தோன்றூம் உங்கள் நினைவுகள்
எம் உயிர் உள்ளவரை உயிர்வாழும்.
என்றும் உங்கள் அன்புக்கு ஏங்கும்
கணவர், பிள்ளைகள், சகோதரர்கள், மைத்துனர்மார்,
மைத்துனிமார், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்.
எங்கள் குடும்ப சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவித்துக் கொள்கின்றோம்.அன்னாரின் ஆத்ம சாந்திக்கும் எம் இறைவனாம் ஐயனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!...