யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி சச்சிதானந்தன் அவர்கள் 14-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் பூபதி தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி சிவஞானம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
ரஞ்சிதமலர், ராகினி, றஜந்தி, சிவகுகானந்தன்(சிவா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிருஷ்ணசாமி, ராசலட்சுமி, பவளம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரமானந்தன், சிறீஸ்கந்தராஜா, தர்மராஜா, ரேகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுஜீவ்- கல்யானி, சுதர்சன்- கிருஷ்ணலதா, பிரவீனா- ரஜுறன், மாலதி- வேணுகோபன், ரஞ்சித், அபிஷேக், அபிநயா, அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
துளசி, மிதுனா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அம்மாவை இழந்து தவிக்கும் உங்களுக்கும், பிரிவால் துயருற்றிருக்கும் அனைவரின் கவலைகளோடு நாமும் இணைந்து , அவரின் ஆத்மா இறையடி சேர பிரார்த்திக்கிறோம் சிறீகாந்தா குடும்பத்தினர் ஜேர்மனி