கருவிலிருந்து உன்னை பிறப்பித்தவன் தன்
கருவறைக்குள் உன்னை சேர்த்திட்டான், தக்க
பருவம் பார்த்தின்று வாழ்வை முடிக்கவென்று
உருவம் மறந்து நீ உண்மைக்குள் இப்போது
அருமையாய் பெற்று வளர்த்த உன்
அம்மையின், அந்தயின், பின்னர் சென்றடைந்த
அன்பின் தம்பியின் அரவணைப்பில்
அமைதிக்குள் நீ என்று ஆனந்தம் நமக்கின்று
தென் திசை கிழவனிட்கு நன்றிகள் சொல்கின்றோம்
எண்திசையும் உன் பெருமை அவனோடு ஓங்கட்டும்
பண்ணிசையில் பாடுகின்றோம் பல்லாண்டும் உனை வணங்கி
எண்ணற்ற நன்மைகளை செய்தாயே அதை போற்றி
ஆனந்தக் கண்ணீருடன்
அன்பின் தம்பி
மருத்துவர் நித்தி கனகரத்தினம் மற்றும் குடும்பத்தினர்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துடன் கலந்துவிட்ட
எமது அன்பு சகோதரியே உம்மை பிரிந்து வாடுகிறோம்
உமது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்
அன்பு சகோதரர்கள், பெறாமக்கள், மருமக்கள், மைத்துனர், மைத்துனிமார்
எங்களோடு வாழ்ந்து எங்களை எல்லாம் வாழவைத்து நல்வழிகாட்டி எம்மையும் இப்பூவுலகில் புகழுடன் வாழ வழி அமைத்த எங்கள் குல விளக்கு இறப்புச் செய்தி கேட்டு ஓடி வந்து எமக்கு ஆறுதல் கூறியவர்கட்கும் எங்களுடன் துயரில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றியை அன்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.
Sharing in your sorrow. With love and friendship.