Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 JUL 1928
இறப்பு 14 DEC 2015
அமரர் புவனேஸ்வரி குணரட்னம் (பூவதி)
வயது 87
அமரர் புவனேஸ்வரி குணரட்னம் 1928 - 2015 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், தையிட்டி, வண்ணார்பண்ணை ஐயனார் கோவிலடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி குணரட்னம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.  

உடலில் சுமந்து உதிரத்தை உணவாய் ஊட்டி
உன் உயிரை பகிர்ந்து என் உருவம் தந்தாயே அம்மா!

இன்று எம் உடலும் உயிரும் உன்னையே
அழைக்கின்றது அம்மா அம்மா என்று

வாழும் காலத்தில் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
தனக்கென ஓர் இடத்தைப் பிடித்த எங்கள் தெய்வமே!

பத்தாண்டு காலம் உருண்டோடி விட்டது
நம்ப முடியவில்லை
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே!
ஏங்குகிறோம் உங்கள் பாசத்திற்காக!

கள்ளமில்லா சிரிப்பும் கனிவான உங்கள் பேச்சும்
வார்த்தைகள் கொண்டு நாம்
வர்ணிக்க முடியாதவை அம்மா!

ஆண்டு பத்து சென்றாலும் ஆறாது எங்கள் மனம்
கண்ணீர் பூக்களால் காணிக்கை செய்து
உங்கள் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute