யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bünde வை வதிவிடமாகவும் கொண்டிருந்த புவனேந்திரன் மாலினி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 28-09-2024
எங்கள் வீட்டு குல விளக்கே அம்மா
எமை விட்டு பிரிந்தது ஏனோ
அன்பின் நிறைவிடமே அம்மா
பாசத்தோடும் சிரித்த முகத்தோடும்
கண்ணின் இமை போல் என்னை காத்து
துன்பம் துயரம் தெரியாது எமை வளர்த்து
தரணியிலே எமை உயர வைத்து
இன்பமுடன் நாம் வாழ வழிகாட்டி
எமை எல்லாம் ஆழாத்துயரில் ஆழ்த்தி
விட்டு சென்று ஆனதம்மா ஓராண்டு
ஓராண்டு காலமதில் உமைப் பிரிந்து
ஒரு நொடிப்பொழுதும் உமை மறவாமல்
நாம் வாழ்கின்றோம் எத்தனை ஆயிரம்
உறவுகள் எமை அணைத்திட இருந்தாலும்
அத்தனையும் எம் அம்மாவுக்கு நிகராகுமா?
ஆண்டுகள் பல ஆனாலும்
ஆறாது
எம் துயரம் நீங்காது
அம்மா எம் மனதில்
உன் நினைவு
இன்னொரு பிறப்பு ஒன்று
உண்டெனில் உன் பிள்ளைகளாக
மட்டுமே
நாம் பிறந்திட வேண்டும் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டிநிற்கின்றோம்.