20ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 03 MAR 1970
உதிர்வு 16 AUG 2002
அமரர் புஸ்பகலா பாலகிருஸ்ணன்
வயது 32
அமரர் புஸ்பகலா பாலகிருஸ்ணன் 1970 - 2002 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும, சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த புஸ்பகலா பாலகிருஸ்ணன் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டுகள் இருபது அகன்றோடி
 விட்டாலும் அழியாத நினைவலைகள்
 எம் அடிமனதின் ஆழத்தில் இருந்து
வதைக்கிறதே அம்மா என்ன
செய்வோம் நாங்கள்?
 ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்து எம்மை
 வழிநடத்த வேண்டும் அம்மா!

பாசத்தை அள்ளிக் கொடுத்தாய்
 அன்பால் அரவணைக்க
கற்றுக் கொடுத்தாய்! இரவெல்லாம்
 விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம் துறந்து
 மகிழ்ந்திருந்தாய் அம்மா…!

திருப்ப முடியாத காலத்தை
 உங்கள் நினைவுகளுடனும்
 நிழல்ப்படத்தினூடாகவும்
 திரும்பிப்பார்க்கின்றோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: பிள்ளைகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute