யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புஷ்பேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் 20-01-2023 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, இராஜேஸ்வரி தம்பதிகளின் அருமை மகளும்,
தாமோதரம்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
தேவசேனன், இந்திரசேனன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
சுந்தரலிங்கம் நீலாம்பிகை, பாலசுந்தரம் விமலாம்பிகை, சங்கரப்பிள்ளை இரவீந்திரன் ஆகியோரின் மூத்தச் சகோதரியும்,
சரண்யா, யசாகன், கிறிஸ், ஈசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
இரவீந்திரன் வசந்தி, காலஞ்சென்ற காசிலிங்கம் வேதநாயகி ஆகியோரின் மைத்துனியும்,
தேவசேனன் சிவானுஜா, இந்திரசேனன் தர்ஷினி, அச்சுதன் அபர்ணா, இரவீந்திரன் மிதுனன், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஞானப்பூங்கோதை, புவனசுந்தரி(மருத்துவர்), இராமேஸ்வரலிங்கம், கமலவல்லி ஆகியோரின் பாசமிகு மாமியும்,
மயூரன், சஞ்ஜேய், வரதன், மைதிலி, இளமாறன் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 22 Jan 2023 11:30 AM - 3:30 PM
- Monday, 23 Jan 2023 1:00 PM - 2:00 PM
- Monday, 23 Jan 2023 2:00 PM - 4:00 PM
- Monday, 23 Jan 2023 4:30 PM
65 வருட கால நண்பி புஷ்பேசின் குடும்பத்தினருக்கு எங்கள் துயரம் கலந்த அனுதாபங்கள். அவரது ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கும். உமா நிர்க்குணன் குடும்பம்