யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புஷ்பவதி சிவானந்தகுரு அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா எங்கள் அன்பே!
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து
இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதனை
எங்களால் நம்பமுடியவில்லை தாயே!
நீங்கள் தானே இருந்தீர்கள்
எங்கள்
அகல் விளக்காய்,
விழி நீரை எமக்கு பரிசளித்து
விடை பெற்று எங்கு சென்றீர்கள் அம்மா!
உன் மடியில் ஒரு கணம் சாய
பூத்த உந்தன் கொடிகள்
தவிக்குதம்மா
பூக்காதோ மீண்டும்
உங்கள்
வாழ்வு இன்றே!
ஆண்டவா, ஏன் பறித்தாய் எங்கள் தாயை!
வளமான வாழ்க்கையை
கொடுத்து
வாழ வைத்த தெய்வமே
அம்மா, பூ உலகிலிருந்து
விடை பெற்று விண்ணுலகம்
விரைந்தீர்களோ.!
அம்மா உன் ஆத்மா சாந்தி அடையட்டும்
உம் நினைவு எம்மை வாட்டுதம்மா
நீங்காத உங்கள் நினைவில்
நித்தமும் நாம் வாழ்கின்றோம்
என்றென்றும் எழிலோடு எம் நெஞ்சிலெ நீ வாழ்வாய்!
அம்மா, நீங்கள் பூமியை விட்டு
விடை பெற்றாலும் எங்கள்
மனதை விட்டு அகலவே மாட்டீர்கள்
தங்கள் ஆத்மா நன்னிலை பெற்று
வல்வை முத்துமாரியம்மன் திருவடியை
அடைய வேண்டுகிறோம்.
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அம்மா!