1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Castel Goffredo ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புஸ்பரூபன் ஜெயலலிதா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனதுவோ அன்னையவள் பிரிந்து?
கண்களில் தாரையாய் நீரது வழிந்தோட நீங்கள்
விண்ணகம் விரைந்து சென்றதேனோ – மண்ணில்
புண்பட்ட நெஞ்சங்களாகி நாம் துடிக்கிறோமம்மா!
பொழிந்த உங்கள் பாசத்தினை எண்ணி விழியிலே
வழிந்தோடும் நீரதைத் துடைக்க வழிபார்த்து
வாசலில் காத்துள்ளோம் – மீதிக்காலமதைக்
கழிக்கும் வகைதெரியாது வாடுகிறோமம்மா!
அன்னமது அளித்து ஆறுதலாய்ப் பேசிய
உன்னத அன்பின் ஊற்றினைப் பிரிந்து கன்னத்தில்
வடியுது கண்ணீர் வெள்ளமாய்! தன்னந்தனியே
எமைத் தவிக்கவிட்டு சென்றீர்களேயம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Rest in Peace From Babu family