யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Castel Goffredo ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புஸ்பரூபன் ஜெயலலிதா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
அன்பின் இலக்கணமாய் நட்பின் சிகரமாய்
பாசத்தின் உறைவிடமாய்
நேசத்தாலும், பண்பாலும், எல்லோரையும் அரவணைத்த
பெற்ற மகளே, பெற்றெடுத்த தாயே, உற்ற துணையே
தாய், பிள்ளைகள், கணவரைத் தவிக்க விட்டு
எங்குதான் சென்றீரோ?
தன்னம்பிக்கை கொண்ட ஒளிச்சுடரே
யார் கண்பட்டதோ
காலன் உம்மை விரைவாக அழைத்ததேனோ
உடன் பிறந்தோர், உற்றார், உறவினரை புலம்பவிட்டு
கண் காணாத் தேசம் சென்றது ஏனோ
நேற்று இருந்தார் இன்றில்லை இன்று இருப்போர்
நாளை இல்லை என்றும் எம்முடன்
இருப்பவர் என நினைத்தோம் இன்று எம்முடன் இல்லை
இவ் உலகை விட்டு நீங்கள் நீங்கினாலும் உங்கள்
நினைவுகள் எங்கள் நெஞ்சங்களில் என்றென்றும்
நிலைத்திருக்கும், நிறைந்திருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
நன்றி நவில்கின்றோம்
எங்கள் அன்பு திருமதி புஸ்பரூபன் ஜெயலலிதா எம்மை விட்டுப் பிரிந்த செய்தி கேட்டு உடன் வந்து எங்கள் கவலை துயரத்தைப் பகிர்ந்த உற்றார், உறவினர், அயலவர், நண்பர்கள் அனைவருக்கும், தொலைபேசி, மின் அஞ்சல், முகநூல் மற்றும் சமூகவலைத் தளங்களில் அநுதாபம் தெரிவித்தவர்களுக்கும், நேரில் வந்து கிரியை நிகழ்வில் கலந்து மலர்தூவி, மலரஞ்சலி செலுத்தியவர்களுக்கும் பல வழிகளில் உதவி ஒத்தாசை புரிந்த உண்மை அன்பு கொண்டவர்களுக்கும் எமது நன்றிகள் 26-12-2018 புதன்கிழமை அன்று Via Alcide de Gasperi, Ceresara, 46040 - mantova வில் நடைபெறும் அந்தியேட்டிக் கிரியை நிகழ்விலும், ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும், மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய! எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி!ஓம் சாந்தி! ஓம் சாந்தி