
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராணி சண்முகராஜா அவர்கள் 21-11-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சகானா, சர்மிலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திலகவதி(இலங்கை), அமிர்தலிங்கம்(சுவிஸ்), ஜெயகுமார்(கனடா), ரஞ்சிதமலர்(கனடா), சுரேஸ்குமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வரட்ணம், சிவனேஸ்வரி(பாப்பா), விஜயலட்சுமி, தேவராசா, சசிகலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சயந்தன், சாருஜன், சாதனன், அஸ்வின், அஜெய், அனிக்கா ஆகியோரின் அன்பு மாமியும்,
ஜெனசா, சனேசன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்காலிக அசாதாரண சூழ்நிலை காரணத்துக்கமைய ஓரேபொழுதில் குறிப்பிட்ட பேர்மட்டுமே மண்டபத்தில் உள்நுளைய அனுமதியுள்ளதால், அஞ்சலி செலுத்த வந்தவர்கள்சுழற்சிமுறையில் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கொரோனா வைரஸ்தாக்கத்தால் நேரடியாக அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் இறுதிக்கிரியையை இங்குலங்காசிறி இணையதளத்தில் நேரலையூடாக பார்வையிடலாம்.