
வடமராட்சி கிழக்கு உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி சங்கரப்பிள்ளை அவர்கள் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை(முன்னாள் அதிபர்- யா/உடுத்துறை மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,
அல்பிரட் தம்பிராசா சட்டம்பியார் தம்பதிகளின் அன்பு பேத்தியும்,
ரொபேட் செல்வநாயகம் லில்லி மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வியும், வடமராட்சி கிழக்கு வேம்படி உடுத்துறையைச் சேர்ந்த பொன்னையா-வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
புஸ்பகுமார்(லண்டன்), காலஞ்சென்ற புஸ்பாகரன்(அஞ்சல் திணைக்களம்), புஸ்பமாலா கண்ணகுமார்(முன்னாள் சமுர்த்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அம்மன் கிளி(முன்னாள் கிராமிய வங்கி உத்தியோகத்தர்- கட்டைவேலி நெல்லியடி), கனகசிறி (நந்தா- ஆசிரியை நாகர் கோவில் ம.வி), கண்ணகுமார்(ஆசிரியர் ஹாட்லிக் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியும்,
எழில், மகிழினி, மயூரிகா, மகீர்தன், சங்கரதாஸ், கர்ஜன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நல்லடக்க ஆராதனை இலங்கை திருச்சபையினரால் 06-11-2019 புதன்கிழமை அன்று முற்பகல் 11:30 மணியளவில் சம்பந்தர் கடைச் சந்தி, கரவெட்டி என்ற முகவரியில் உள்ள அன்னாரின் சிரேஷ்ட மகனின் இல்லத்தில் நடத்தப்படும் என்பதை எமது குடும்ப நண்பர்கள், எங்கள் உறவுகள் அனைவருக்கும் தாழ்மையுடன் அறியத்தருகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.