Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 FEB 1952
இறப்பு 01 JUN 2024
திருமதி புஸ்பராணி சபாரட்ணம் 1952 - 2024 நாகர்கோவில், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாகர்கோவில் குடாரப்பைப் பிறப்பிடமாகவும், புலோலி பருத்தித்துறை, வவுனியா, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், உபயகதிர்காமம் பருத்தித்துறையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராணி சபாரட்ணம் அவர்கள் 01-06-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சபாரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

இந்திரகுமார்(நெதர்லாந்து), காலஞ்சென்ற இந்திரஜித், இந்திரமேனன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நிரஞ்சலா, கீதா, யுதர்ஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவஞானசுந்தரம், மகாலிங்கம், திருலோகநாயகி, இந்திராணி, பிரபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகாம்பிகை, செளந்தரவள்ளி, காலஞ்சென்ற யோகேந்திரம், வீரசிங்கம், மல்லிகா, சரோஜாதேவி, காலஞ்சென்ற பாலபரமேஸ்வரி, லோகநாதன், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற நடராசா, சிவராசா, நிர்மலா, காலஞ்சென்ற சரவணபவன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்ற பிரசாம்பவி, கம்ஷனா, துஷாஜினி, துஷாந்தன், பிரஜன், கயலினி, இனியன், அதியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

உமாசுதன், மகிஷன்- லோகினி, சசிதரன்- நிலாஜினி, கிருஷாந்த்- வினோதிகா, சுபாஷ், டிலக்‌ஷன், டிலக்‌ஷனா ஆகியோரின் அன்பு அத்தையும்,

பிரதீப்- தனுஜா, பிரசன்னா- ரஜிவா, பிரசாத், லக்‌ஷினி, சத்தியவேல்- விருஜா, சதிஷன், செந்தூரன்- டென்சி, கஜிதா, அஜிதா, சபிசன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2024 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சபாரட்ணம் - கணவர்
இந்திரகுமார் - மகன்
இந்திரமேனன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Kamalanathan family from Netherlands.

RIPBOOK Florist
Netherlands 2 weeks ago
F
L
O
W
E
R

Flower Sent

By Kugathas Family from Canada

RIPBOOK Florist
Canada 2 weeks ago

Photos

Notices