யாழ். சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புஸ்பராணி மகாராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா என, ஆசையுடன் ஆவலாய்,
அழைக்க முடியாமல், அநாதரவாய் ஆகிவிட்டோம்.
ஆண்டாண்டாய் அரவனைத்த, ஆருயிர் தாய் நீ
அழுது புலம்புகின்றோம், ஆறுதலாய் யாருமில்லை....
அழகிய வதனம், அதில் அழகாய் பொட்டுவைத்து,
அமைதியாய் சிரித்தபடி, அரங்கேற்றும் அம்மா நீ,
கடித்திடாத கருனை தாய்- தீ
காலமெல்லாம் எமை காத்து நின்றாய்
இன்முகம் காட்டி, அனைவரையும் உபசரித்தாய்,
இல்லையென்று நீ, எவர்க்கும் மொழிந்ததில்லை
உற்றார், உறவினரென, ஊரே கூடி வந்தாலும்
உன் முகம் கோணாது, உபசரித்து உயர்ந்து நின்றாய்
சக்கர நாற்காலியில், சதுரங்கம் ஆடிவந்து
சகலகலவல்லியாக சளைக்காமல், சமர்புரிந்தாய்
புன்முறுவல் பூத்தபடி, புது உலகம் காட்டி நின்றாய்
புலம்புகின்றோம் எந்நாளும், ஏங்குகிறோம் உனை நினைத்து
எல்லோரும் இறப்பது, எழுதிவைத்த அவன் செயல்
எம்மாலே உன் இறப்பை, எடுத்தெறிய முடியவில்லை
எல்லாம் வல்ல தேவனிடம், வேண்டி நின்று
இறைஞ்சுகிறோம், வணங்குகின்றோம் தாயுன்னையே