Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 FEB 1945
இறப்பு 11 APR 2020
அமரர் புஸ்பராணி கனகலிங்கம் 1945 - 2020 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 54 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த புஸ்பராணி கனகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று மறைந்தாலும்
ஆறவில்லை எம் துயரம்
அழுத கண்ணீரும் காயவில்லை தன் ஈரம்
ஆறாத்துயரில் எமை ஆழ்த்திவிட்டு மீளாத்துயிலில்
எங்கே மறைந்தாய் எம் அன்பு தெய்வமே!

காலத்துடன் போராடினோம் உம்மை காப்பாற்ற
கடவுளிடம் மன்றாடினோம் உயிர் காக்க -ஆனால்
காலனவன் கவர்ந்து கொண்டானே வெகுவிரைவாய்

கலகலப்பான பேச்சும் கனிவான புன்னகையும்
பாசம் கொண்டு உறவாடி மகிழும் உங்கள்
இனிய முகம் காணவே துடிக்கின்றோம்
ஓராண்டு ஆனாலென்ன ஓராயிரம் வருடங்கள்
ஓடினாலென்ன என்றும் உங்கள் பிரிவால் துயருறுகின்றோம்

எங்கள் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து
ஆண்டவன் அடியில் உங்கள் ஆத்மசாந்திபெற
வேண்டி நிற்கும் கணவன், பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள்

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்