
யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புஷ்பநாதன் பத்மாவதி அவர்கள் 24-12-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மூத்தப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கனகாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற புஷ்பநாதன்(நிர்வாக உத்தியோகத்தர் வைத்தியப்பிரிவு) அவர்களின் அன்பு மனைவியும்,
யாழினி(ஆசிரியர் ஸ்ரீகணேசவித்தியாசாலை- சித்தன்கேணி), சதானந்தன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருஷ்ணானந்தன், காலஞ்சென்ற கமலாவதி, லீலாவதி(பாலர் பாடசாலை ஆசிரியை- மாதர் சங்கம்- சித்தங்கேணி), மாணிக்கவாசகர்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மூத்தச் சகோதரியும்,
றஞ்சன், சுபாஷினி(கௌரி- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆரபி, துவாரகன், மாதங்கன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தட்சாயினி, நவரட்ணம், சாந்தி(ஜெர்மனி), சரஸ்வதி, இராஜேஸ்வரி, இரத்தினேஸ்வரி, ஞானலட்சுமி, காலஞ்சென்றவர்களான தியாகராசா, பத்மநாதன், விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-12-2018 புதன்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் இடம்பெற்று வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We pay respect towards your loss; and we feel deep sorrow towards your loss as well Suri(Kalviankada) From Canada