யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த புஷ்பமணி வைத்தியநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்று உங்கள் நினைவு நாள்
ஆனால் நினைவு நாள் போல் எண்ணுவதற்கு
எங்கள் உள்ளம் தடை போடுகின்றது
சுந்தரத் தமிழில் தெளிவாக உரைத்த உங்கள் அறிவுரைகள் இன்று
எங்களை அவையில் முன் நிலையில்
அமர்த்தி இருக்கின்றது- ஆனால்
அதை பார்க்க நீங்கள் இல்லை- அம்மா
உங்கள் அரவணைப்பிற்காய் ஏங்கும் எமது உள்ளம்
சிறுகுழந்தை போல் அழுது வடிக்கின்றது
இருந்தும் நீங்கள் எம்முடன் வாழ்கின்றீர்கள்
என்று மனம் அமைதி கொள்கின்றது
இன்று வானுறையும் தெய்வமாகி விட்ட
எங்கள் குடும்பத் திருவிளக்கே!
என்றும் எம் வாழ்கைப் பயணத்திற்கு
விண்ணிலிருந்து ஒளியூட்டி நல்வழி காட்டுவீர்கள்
எப்போதும் உங்கள் வழிகாட்டலில் நாங்கள்..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தங்கள் பிரிவால் துயரும் அன்புக் கணவன், மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள் மற்றும் அன்புச் சகோதரன் குடும்பம்