
யாழ். முகமாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart, Soest ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரித்தானியா Bromley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராஜா புஷ்பமலர் அவர்கள் 06-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தர்மராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜீவ், ரவின் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மைக்கே அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம் மற்றும் ராஜன்(Bern- சுவிஸ்), லிங்கம், செல்வம்(Catford- லண்டன்), ராணி, மனோ(Bern- சுவிஸ்), தவா(Walthamstow- லண்டன்), சிவா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வீரசிங்கம், தவமணி, யோகேஸ்வரி, குமரகுரு, தேவமலர், லதா(Bern- சுவிஸ்), யோகம், மல்லிகா(Catford- லண்டன்), நிஜா(Bern- சுவிஸ்), ஜனா(Walthamstow- லண்டன்), யூஜின் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரபேல் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wir übermitteln euch unser aufrichtiges Beileid zum Verlust eurer lieben Mutter. Gleiches auch allen Geschwistern und Ehepartnern, sowie Kindern. Persönlich habe ich Sie immer zu freudigen...