

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், நாவலடிக்கேணியை வதிவிடமாகவும், தற்போது தெஹிவளை 21/1, பிரேசர் அவனியுவை வசிப்பிடமாகவும் கொண்ட புஷ்பலட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் 29-09-2022 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா சுப்பிரமணியம்(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தமலர்(இலங்கை), மகேந்திரராஜா(கனடா), சண்முகராஜா(லண்டன்), கனகமலர்(இலங்கை), ஜெயராஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலகுமார், பானுமதி, அனுஷா, கௌரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, பாக்கியலட்சுமி, உருத்திரமூர்த்தி, காலஞ்சென்ற பகவதியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், மனோன்மணி, ஏனாதிநாதன் மற்றும் கனகசபாபதி, சோதியம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிரஞ்ஜனி, கஜேந்திரன், துளசி, சிவாஸ்கர், டிலானி, டிலக்ஷன், அக்ஷரன், அட்ஷயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 01-10-2022 சனிக்கிழமை அன்று பி.ப 04:00 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details