Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 DEC 1950
இறப்பு 25 APR 2016
அமரர் புஷ்பகாந்தி சோமசுந்தரம்
வயது 65
அமரர் புஷ்பகாந்தி சோமசுந்தரம் 1950 - 2016 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புஷ்பகாந்தி சோமசுந்தரம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

வசந்த கால கோலங்கள், வானில் விழுந்த கோடுகள்,
கலைந்திருக்கும் கனவுகள், கண்ணீர் சிந்தும் நினைவுகள் !
அம்மா நீ நீண்ட துயில் கொள்ளும் அழகைப்
பார்க்க முடியாமல் துடிக்கின்றோம், தவிக்கின்றோம்,
நினைத்து நினைத்து அழுகின்றோம் !

எங்கேயம்மா போய்விட்டாய் என்று நினைத்து நினைத்து
வருந்துகின்றோம் ஆனால் நீ எங்கேயும் போகவில்லை
எங்களுடனும் அப்பாவோடும் இதயத்தில்
வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றாய் அம்மா !

உதிரம் நீ கொடுத்தாய் ! உயிரும் நீ கொடுத்தாய்,
உடலும் நீ கொடுத்தாய் அப்படி இருக்கும் பொழுது
நீ எப்படி பிரிந்து போவாய் சொல்லம்மா ?
இல்லையம்மா நீ எம்மோடுதான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றாய்

எத்தனை பிறப்பெடுத்தாலும் நீரே
எமது தாயாக வரவேண்டும் அம்மா நீ
என்றும் மறையவில்லை எம்மோடுதான்
வாழ்ந்து கொண்டு இருக்கின்றாய் அம்மா ! அம்மா !! அம்மா !!!

உன் ஆத்மா சாந்தியடைய வணங்குகின்றோம்!
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices