

திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூர்ணானந்தேஸ்வர குருக்கள் சுந்தரேஸ்வர ஐயர் அவர்கள் 20-01-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் ஏய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற மங்கள கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஹம்சானந்தி(பிரான்ஸ்), பூர்ணசந்திரிகா(கொழும்பு), ரவிசந்திரிகா(திருகோணமலை இ.கி.ச கோணேஸ்வர இந்துக் கல்லூரி, ஒய்வுபெற்ற ஆசிரியை- வேம்படி மகளிர் கல்லூரி ), ஜோதீஸ்வருபினி(கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் கிழக்கு மாகாணம்), சுகந்தி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீநிவாச சர்மா, ஸ்கந்ததாச சர்மா, காலஞ்சென்ற கிருஷ்ணானந்த சர்மா, பரமேஸ்வர சர்மா, பிரபாகர சர்மா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மனீஷா, மயூரன், மித்துன், குஹப்பிரியா பார்க்கவி, சபரீஷன் ஸ்ரீநிகேதன், மகரேஷ் பவித்திரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-01-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இல. 111/17 கந்தசுவாமி கோவில் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.