

யாழ். சாவகச்சேரி, நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Raynes Park வதிவிடமாகவும் கொண்ட புனிதநாயகி அம்பாள் சீவரட்ணம் அவர்கள் 25-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் முதலியார் சின்னம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான விதானை வேற்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான விதானை சரவணமுத்து நாகரத்தினம் அம்பாள் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை(தம்பிராசா) சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம், குமாரசுவாமி, சிவபாக்கியம் அம்பாள், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சீவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜீவரதி, சிவகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஞானரட்ணம், ஜெயக்குமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மீனா- வினோஜன், சங்கீதா, யாழினி- பிரேந்திரா, செந்தூரன்- சிந்துஜா, சுகந்தி- சுபிதன் ஆகியோரின் அன்புப்பேத்தியும் தியோ, அஞ்சலி, அர்ஜுன், ஆதித்யா, அரவிந்த், அகிலன், மாறன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 08 Mar 2025 2:00 PM - 4:00 PM
- Sunday, 09 Mar 2025 9:30 AM - 11:30 AM
- Sunday, 09 Mar 2025 12:30 PM - 1:15 PM