-
10 MAR 1951 - 04 DEC 2019 (68 age)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : வெள்ளவத்தை, Sri Lanka
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பிரின்ஸ் ஜெயரட்ணம் ஜெயநாதன் அவர்கள் 04-12-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜெயரட்ணம், தங்கமலர் தம்பதிகளின் அருமை புதல்வரும்,
சவித்திரி அவர்களின் அன்புக் கணவரும்,
மேனகா, ஜெயரதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிஷாந்தன் நியூட்டன்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மாமனாரும்,
பேர்சி ஜெயக்குமார், பேல் நந்தகுமாரன்(கனடா), ரூபி சிதம்பரப்பிள்ளை, பீட்டர் ஜெயசீலன்(ஜெர்மனி), டயமன் சிம்சன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராணி ராஜபக்ஷ அவர்களின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான ஜோர்ஜ் மயில்வாகனம், சிந்தியா தம்பதிகளின் மருமகனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05-12-2019 வியாழக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் காலை முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு மாலை 04:00 மணியளவில் நல்லடக்க ஆராதனையின் பின் கல்கிசை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.