Clicky

பிறப்பு 11 SEP 1940
இறப்பு 31 OCT 2021
அமரர் பிறிம்ரோஸ் பத்மாமலர் ஞானசுந்தரம்
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 81
அமரர் பிறிம்ரோஸ் பத்மாமலர் ஞானசுந்தரம் 1940 - 2021 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ஆரியகுளத்து ஆரூரன். 14 NOV 2021 United States

அன்னை என்றால், நீ அன்றோ! அன்பை தந்தாய், ஆருயிராய் நின்றாய், சான்றோர் சிறக்க, சிறப்பு, சிகரம் அடைந்தாயே, தாயே, வணக்கம்...வந்தனம்! உன்னை தினம் தோறும் ஞாபகப்படுத்த, பாரில், பார்வை இல்லாதாருக்கு, ஞானத்தின் ஒளியாய், ஞானத்தை- எங்கள், ஞானநாதனை, நாதனாய், நலமிக்க, மகனை-மகானாய் ஈன்றாயே, ஈர்ப்பு நீ எமக்கு. கடல் கடந்து வந்து, கடமை செய்தாயே! கலப்பு இல்லா, கற்பகம் நீ எமக்கு, கடல் கடந்து வந்து, நீ பிறந்த ஊரை இரு கண்ணாய் காத்தாயே, கண்ணம்மா நீ எமக்கு, இறைவன் பாதங்களின் மலராய், பத்ம-பத்மா-மலராய், தோன்றாமல் தோன்றி, பாரில் பாதங்கள் பதித்து, விண்ணுலகம் சென்றாயே, சென்றுவா, வென்றுவா