Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பிறேமா சிவராஜா
இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியை
இறப்பு - 04 FEB 2018
அமரர் பிறேமா சிவராஜா 2018 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிறேமா சிவராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா.....
காலன் அவன் கவர்ந்து சென்று
இன்றோடு ஆனதம்மா ஆண்டுகள் ஐந்து…..

உந்தன்.....
அழகான முகம், அறிவான பேச்சு
தெளிவான சிந்தனை, தீர்க்கமான முடிவு
அத்தனையும் நினைக்காத நிமிடங்கள் இல்லையம்மா
அன்பான அழைப்பு, அக்கறையான அரவணைப்பு,
ஊக்கமூட்டும் ஆதரவு, உறுதியான பிரார்த்தனை
மொத்தமும் தேடித்தேடி தொலைகின்றோம் அம்மா.....

வெற்றிகள் பல நாம் கண்டபோதிலும்
பெற்றவள் உம்மிடம் பகிரமுடியாமல்
அத்தனையும் வெற்றிடமாய் தோன்றிட
நித்தம் உம்மை நினைத்து ஏங்குகிறோம்
மற்றவரில் உம்மைத்தேடி ஏமாறுகிறோம்…..

பெற்றவளின் இழப்பு அது
பற்றில்லா வாழ்வை தரும் - சித்தனாய்
வாழவைக்கும் என்று சத்தியமாய்த் தெரியாதம்மா
இன்று போலவே இனிவரும் காலமும்
ஆறாத பிரிவுத்துயரில் கடந்து போகுமம்மா
பசுமையான உம் நினைவுகளிற்கு
எம் கண்ணீரைத் தூறலாக்கி காத்திருப்போம்
உமைக்காணும் வரை…..

உங்கள் ஆத்ம சந்திக்காக பிரார்த்திக்கும்.....
குடும்பத்தினர்   

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices