5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
ஜேர்மனியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Lohne ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரணவன் சந்திரகுமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்களை இமை காப்பது போல
நாம்
காத்து வந்த எம் செல்ல மகனே!
வையகத்தில் நீ வளமோடு வாழ்வாய்
என வாஞ்சையுடன் நாங்கள்
கண்ட கனா ஏராளம்
அத்தனையும் நீ கனவாக்கி
எங்கு சென்றாய் ஐயா!
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
அன்பான உன் உள்ளமதில் ஆசை மொழி
வார்த்தை இவையெல்லாம் நாம்
இழந்து தவிக்கின்றோம்
நினைக்கின்ற வேளையில் நெஞ்சம்
வெடித்து தவிக்கின்றோம்
நீ வான் உயரம் தெய்வத்தில் ஒன்றாகி
நின்று எமையெல்லாம் பார்த்திடுவாய் என
எண்ணி ஐந்தாண்டு நினைவு நாளில்
விழியருவியாய் ஏங்கியே
நிற்கின்றோம் உனைப்பார்த்து
உந்தன் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திகின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
You will always be missed! RIP ? - Periappa Family