10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரகாஷ் ஆனந்தக்குமார் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களை விட்டு நீ பிரிந்து
பத்து ஆண்டுகள் சென்றது
மறைந்த உன் நினைவு மட்டும
நெஞ்சில் மாறாமல் உள்ளது
மகனே ஆண்டவன் அழைத்திட்ட
பின்னாலே அழுகிறது
இதயம் வெறுமையாகவே..
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உன் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே
இருக்கும் மகனே..
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும்
உன் நிலவு முகம் தேயாதடா
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது..
உன் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்