Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 APR 1965
இறப்பு 25 JUL 2011
அமரர் பூவலிங்கம் யோகராணி 1965 - 2011 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்.  மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த பூவலிங்கம் யோகராணி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

வசந்த கால கோலங்கள், வானில் விழுந்த கோடுகள்,
கலைந்திருக்கும் கனவுகள், கண்ணீர் சிந்தும் நினைவுகள் !
அம்மா நீ நீண்ட துயில் கொள்ளும் அழகைப்
பார்க்க முடியாமல் துடிக்கின்றோம், தவிக்கின்றோம்,
நினைத்து நினைத்து அழுகின்றோம் !

எங்கேயம்மா போய்விட்டாய் என்று நினைத்து நினைத்து
வருந்துகின்றோம் ஆனால் நீ எங்கேயும் போகவில்லை
எங்களுடனும் அப்பாவோடும் இதயத்தில்
வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றாய் அம்மா !

உதிரம் நீ கொடுத்தாய் ! உயிரும் நீ கொடுத்தாய்,
உடலும் நீ கொடுத்தாய் அப்படி இருக்கும் பொழுது
நீ எப்படி பிரிந்து போவாய் சொல்லம்மா ?
இல்லையம்மா நீ எம்மோடுதான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றாய்

எத்தனை பிறப்பெடுத்தாலும் நீரே
எமது தாயாக வரவேண்டும் அம்மா நீ
என்றும் மறையவில்லை எம்மோடுதான்
வாழ்ந்து கொண்டு இருக்கின்றாய் அம்மா ! அம்மா !! அம்மா !!!

உன் ஆத்மா சாந்தியடைய வணங்குகின்றோம்!
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !

தகவல்: குடும்பத்தினர்